Sunday, December 21, 2025

மராத்தியில் பேச சொல்லி பெண்களை அடித்து உதைத்த கும்பல்!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் இரண்டு பெண்கள் இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய இளைஞர் ஒருவர் இனிமேல் மராத்தியில் மட்டுமே பேச வேண்டும் என கூறியுள்ளார்.

அதற்கு அந்த பெண்களில் ஒருவர் “எக்ஸ்கியூஸ்மீ” என்று கூறியிருக்கிறார். அதை புரிந்து கொள்ளாத அந்த இளைஞர் ஆத்திரமடைந்து, “எக்ஸ்கியூஸ்மீ என்பதை மராத்தியில் சொல்லத் தெரியாதா? உனக்கு” எனக்கூறியுள்ளனர். மேலும் அங்கு வந்த சில இளைஞர்கள் இரு பெண்கள் மீதும் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விஷ்ணு நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை முதல் தகவல் அறிக்கை எதுவும் பதிவு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

Related News

Latest News