ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்த டவுசர்

250
Advertisement

மூவாயிரம் ஆண்டுகள் பழமையான கால்சட்டை பற்றிய தகவல்களை
ஆராய்ச்சியாளர்கள் சேகரித்துள்ளனர்.

சில மாதங்களுக்குமுன்பு கல்லறையில் நடைபெற்ற தொல்பொருள்
ஆராய்ச்சியின்போது இந்தக் கால்சட்டை கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள கியான் என் ஸ்மித் என்னும்
ஆராய்ச்சியாளர் கூறும்போது, ”சீனாவின் மேற்குப் பகுதியில் உலகின்
பழமையான இந்தக் கால்சட்டை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குதிரை ஏற்றப் பயிற்சி செய்பவர்களுக்கென்று இந்தக் கால்சட்டை
தயாரிக்கப்பட்டுள்ளது.

செம்மறி ஆட்டுத் தோலில் இந்தக் கால்சட்டை தயாரிக்கப்பட்டுள்ளது.
நான்கு முறைகளில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் கால்சட்டை கிழியாத
வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

போரின்போதும், மலையேற்றப் பயிற்சியின்போதும், குதிரையேற்றப்
பயிற்சியின்போதும் உடுத்திக்கொள்வதற்காக இந்தக் கால்சட்டை
தயாரிக்கப்பட்டுள்ளது.

3400 ஆண்டுகளுக்கு முன்பே சீனாவில் கால்சட்டை தயாரிக்கும்
தொழில் சிறப்போங்கி இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.