Sunday, October 5, 2025

தலைவன் வேற ரகம்! கிறுகிறுக்க வைக்கும் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு! 2033ம் வருடத்துக்குள்…

டெஸ்லா, எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களை தன்வசம் வைத்திருக்கும் தொழிலதிபர் எலான் மஸ்க், மீண்டும் உலக நிதி வட்டாரத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார். ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள சமீபத்திய உலக பணக்காரர்களின் பட்டியலில், மஸ்க்கின் சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலர். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 44 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த உயர்வுக்கு காரணமாக டெஸ்லா நிறுவன பங்குகளின் விலை பெரிதும் செயல்பட்டுள்ளது. 2025ம் ஆண்டில் மட்டும் டெஸ்லா பங்குகள் 14 சதவீதம் வரை உயர்வு கண்டுள்ளன. இதனால், 54 வயதான எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சாதனை அளவில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது.

பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த வளர்ச்சி தொடர்ந்தால், 2033 மார்ச் மாதத்திற்குள் எலான் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனராக உருவெடுப்பார் என கணிக்கப்பட்டுள்ளது. இது உலக வரலாற்றில் இதுவரை யாரும் எட்டாத புதிய சாதனையாக அமையும்.

மஸ்க்கை தொடர்ந்து, உலக பணக்காரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை ஆரக்கிள் நிறுவனத்தின் நிறுவனர் லாரி எலிசன் வகிப்பது குறிப்பிடத்தக்கது. உலகின் எந்த தொழிலதிபரும் அடைய முடியாத அளவுக்கு, ஏறக்குறைய 44 லட்சம் கோடி சொத்துடன், எலான் மஸ்க் மீண்டும் உலக நிதி வரலாற்றில் தனக்கான உயர்ந்த இடத்தைப் பெற்றிருக்கிறார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News