போட்டோ ஷுட்டுக்காக மணப்பெண் செய்த மாறுபட்ட செயல்

155
Advertisement

போட்டோ ஷுட்டுக்காக மணப்பெண் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களைக் கலக்கி வருகிறது.

பொதுவாக, திரைப்பட நடிகர், நடிகைகளும், மாடலிங் துறையில் உள்ளவர்களும் தங்களின் பட வாய்ப்புக்காகவும், தொழில்வாய்ப்புக்காகவும் போட்டோ ஷுட் நடத்தி, அப்புகைப்படங்களைத் தொழில்ரீதியாகத் தொடர்புடையவர்களுக்கு பிஆர்ஓ.க்கள்மூலம் அனுப்பிவைப்பது வழக்கம். அந்த வழக்கம்கூடத் தொழில்நுட்ப வளர்ச்சியால் தற்போது மாறிவிட்டது.

சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகள், மாடலிங் செய்வோரே தங்களின் சமூக வலைத்தளப் பக்கங்களில் தங்களைப் பற்றிய புகைப்படங்கள், விவரங்களை நேரடியாக வெளியிட்டு யார் வேண்டுமானாலும் அவற்றைப் பார்த்துக்கொள்ளும் அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.

Advertisement

ஆனால், மணப்பெண் ஒருவர் இதுபோன்ற போட்டோ ஷுட் நடத்தியிருப்பது பலரின் புருவங்களை உயர்த்த வைத்துள்ளது.

எதற்காக இந்த போட்டோஷுட் என்பதுதான் அவர்களின் மில்லியன் டாலர் கேள்வி.

அதுவும் உடற்பயிற்சிக்கூடத்துக்கு மணப்பெண்ணுக்குரிய பட்டுச்சேலை உடுத்தி, தங்க நகைகள் அணிந்து முழு அலங்காரத்துடன் சென்று ஒர்க் அவுட் செய்ததுதான் வியப்புக்குக் காரணமாகியுள்ளது.

இருவீட்டாரும் மணமகன், மணமகளை நேரில் பார்த்து, தேவையான விவரங்களை அறிந்து வரன்கள்மீது முழு நம்பிக்கை அடைந்த பிறகே திருமணத்தை உறுதிப்படுத்தி, அதற்கான ஏற்பாடுகளைச் செய்வார்கள். அப்போது மணமகன், மணமகள் இருவரும் நேரில் பார்த்துக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தித் தருவார்கள். அதனால், போட்டோஷுட்டுக்கு அவசியமில்லை.

அப்படியிருக்கும் நிலையில், இந்த போட்டோஷுட் உடல் வலுவோடு இருப்பதை உணர்த்துவதற்கா? அல்லது வருங்காலக் கணவனைக் கவர்வதற்கா? அல்லது மிரட்டுவதற்கா என்கிற கேள்வி எழுந்துள்ளது.