இந்தியா கொடுத்த மரண அடி! காஷ்மீர் விவகாரத்தில் கதறும் ‘பாகிஸ்தான்’!

சர்வதேச அளவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான ராஜதந்திரப் போர் மீண்டும் ஒரு புதிய திருப்பத்தைச் சந்தித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் வெளியிட்ட கருத்து, பாகிஸ்தானை நிலைகுலையச் செய்துள்ள நிலையில், அதற்கு இந்தியா அளித்துள்ள பதிலடி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதிகள் என்றும், பாகிஸ்தான் காட்டும் இத்தகைய எதிர்வினைகள் வெறும் “விரக்தி” மட்டுமே என்றும் இந்தியா மிகக் கடுமையாகச் சாடியுள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு முதல்முறையாகப் பயணம் மேற்கொண்ட இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர், ஸ்ரீநகரில் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லாவைச் சந்தித்துப் பேசினார்.

அந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜம்மு காஷ்மீர் என்பது “இந்தியாவின் மிக முக்கியமான ஒரு பகுதி” என்று பகிரங்கமாகத் தெரிவித்தார்.

காஷ்மீரின் அபாரமான அழகைப் புகழ்ந்த அவர், அமெரிக்கக் குடிமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளை வரும் காலங்களில் குறைப்பது குறித்துத் தீவிரமாகப் பரிசீலிக்கப்படும் என்றும் ஒரு நம்பிக்கையூட்டும் செய்தியை வெளியிட்டார்.

இது காஷ்மீரின் அமைதி மற்றும் சுற்றுலாத் துறைக்குக் கிடைத்த ஒரு மிகப்பெரிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்கத் தூதரின் இந்தப் பேச்சு பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு மிகப்பெரிய இடியாக இறங்கியது.

ஆத்திரமடைந்த பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரக உயர் அதிகாரியை உடனடியாக நேரில் அழைத்துத் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தது.

காஷ்மீர் குறித்த அமெரிக்காவின் நீண்ட கால நிலைப்பாட்டிற்கு இந்த கருத்து முரணாக இருப்பதாகவும், இது உண்மைக்கு மாறானது என்றும் பாகிஸ்தான் வாதிட்டது.

உலக அரங்கில் காஷ்மீர் விவகாரத்தைத் தொடர்ந்து கிளப்பி வரும் பாகிஸ்தானிற்கு, ஒரு வல்லரசு நாட்டின் தூதரே இத்தகைய கருத்தைத் தெரிவித்தது பெரும் தர்மசங்கடத்தை உருவாக்கியுள்ளது.

பாகிஸ்தானின் இந்தச் சலசலப்பிற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மிகக் கூர்மையான ஒரு பதிலைக் கொடுத்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், பாகிஸ்தானின் இந்த விரக்தி நிலை குறித்துத் தான் கருத்துச் சொல்லத் தேவையில்லை என்று மிக அலட்சியமாகத் தெரிவித்தார்.

“ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் இந்தியாவின் ஒரு பகுதி என்பது ஆணித்தரமான உண்மை; அது நேற்றும், இன்றும், என்றும் மாறாது” என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

பாகிஸ்தானின் புலம்பல்களை இந்தியா சற்றும் பொருட்படுத்தவில்லை என்பதையே இந்தப் பதில் உணர்த்துகிறது. சர்வதேச மேடையில் காஷ்மீர் விவகாரத்தைத் தனது சுயலாபத்திற்காகப் பயன்படுத்தி வரும் பாகிஸ்தானிற்கு, அமெரிக்கத் தூதரின் கருத்தும் இந்தியாவின் துணிச்சலான பதிலடியும் ஒரு மிகப்பெரிய அரசியல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீரில் நிலவும் எதார்த்தமான சூழலை உலக நாடுகள் அங்கீகரிக்கத் தொடங்கியிருப்பது, இந்தியாவின் ராஜதந்திரத்திற்குப் கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாகவே கருதப்படுகிறது.

பாகிஸ்தானின் பிடிவாதம் ஒருபுறம் இருந்தாலும், காஷ்மீர் இந்தியாவின் இதயம் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உலகிற்கு உரக்கச் சொல்லியுள்ளது.

Related News

Latest News