‘எலான் மஸ்க்கோட space x விண்வெளியில பறக்குறத பாத்தாச்சு… அவரோட Starlink இணையதள சேவைய தான் இன்னும் கொஞ்ச நாள்ல நாமளே பயன்படுத்துவோம் போலிருக்கு. மஸ்க்கோட டெஸ்லா கார் இந்தியாவுக்கு வரப்போதாமே? அட இதெல்லாம் பழைய கதைங்க… எலான் மஸ்க்கே அரசியலில் குதிச்சிட்டாரு-ன்றது தான் இப்போதைக்கு Hot Topic. மஸ்க்கோட அரசியல் Entry டிரம்ப் தலையில் இறங்கிய இடியா? மஸ்க் ஆரம்பிச்சிருக்க புது கட்சி தான் அமெரிக்காவோட எதிர்காலமே? அரசியல்ல மஸ்க் சாதிப்பாரா… இல்ல சறுக்கிவிடுவாரா… வாங்க பார்க்கலாம்.
போன வருஷம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தல்ல “என் Friendஅ போல யாரு…” ன்னு கேக்குற மாதிரி குடியரசு கட்சி வேட்பார் டொனால்டு டிரம்புக்கு, உலக மகா பணக்காரர் எலான் மஸ்க் வரிந்து கட்டி தேர்தல் களத்துல குதிச்சு ஆதரவு கொடுத்தார்.
கைமேல கிடைச்ச பலனா அமெரிக்க அதிபரா டிரம்ப்பும் பதவி ஏற்றுட்டாரு. அதோட நிக்கல… அரசு செயல் திறன்-ன்ற பேர்ல புதுசா ஒரு துறைய உருவாக்கி அதனோட தலைவராவும் எலான் மஸ்க்-க நியமிச்சிட்டாரு டிரம்ப். எல்லாம் நல்லா தானே போய்க்கிட்டு இருக்குன்னு சொல்ற நேரத்துல தான் அந்த twist நடந்தது. டிரம்ப் சமீபத்துல BIG BEAUTIGUL அப்பிடின்ற புதிய மசோதாவை கொண்டுவந்தார். இது மஸ்க்குக்கு சுத்தமா பிடிக்கல… அது கோடிகள்ல புரள்றவங்களுக்கு ஆதரவா இருக்குன்னு சொல்லி கடுமையா எதிர்த்தார். கூடவே ட்ரம்ப் அரசு கொடுத்த பதவிய தூக்கி எறிஞ்சிட்டு, ட்ரம்புக்கு எதிராக கருத்துகள அள்ளி தெளிக்க தொடங்கிட்டார்.
அந்த அதிரடியோட அடுத்த கட்டம் தான் “அமெரிக்கா பார்ட்டி” ன்ற புதிய அரசியல் கட்சி. அமெரிக்க மக்களுக்கு சுதந்திரத்தை மறுபடியும் கொடுக்கறதுக்காகத் தான் இந்தக் கட்சி தொடங்கப்பட்டிருக்கறதா மஸ்க் குறிப்பிட்டிருக்கார்.
டிரம்பும் மஸ்கும், ஒரே அரசியல் மேடையல, வித்தியாசமான கண்ணோட்டங்களோட அரசியல் பந்தயத்தில் இறங்கியிருக்காங்க. ஒருத்தரோட வாக்காளர்கள் பழைய பாரம்பரிய கோட்பாடுகளோட இருக்கவங்க…
இன்னொரு பக்கம் நவீன தொழில்நுட்பம், விண்வெளின்னு எதிர்காலக் கனவுகளோடு இருக்கறவங்க.
பாரம்பரிய கோட்பாடு, அரசியல் பின்புலம், ராஜ தந்திர நுண்ணறிவு, காலாகாலமா குடியரசு கட்சி, ஜனநாயக கட்சின்னு 2 பெரிய கட்சிகளுக்கு ஓட்டு போடும் வாக்காளர்கள் இதெல்லாம் அரசியல்வாதி மாஸ்க்குக்கு மிகப்பெரிய சவாலா இருக்கும். தாக்கு பிடிப்பாரா???
எது எப்படியோ… டிரம்புக்கும் மஸ்குக்கும் இடையே இருக்குற இந்த கருத்து மோதல், அமெரிக்க அரசியல் வரலாற்றுல ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமாகுறதுக்கு விதை போட்ட மாதிரி ஆயிடுச்சு. எலான் மஸ்க்கோட அரசியல் Entry டிரம்ப்போட தனித்துவத்துக்கு கண்டிப்பா tough கொடுக்கும். அதுல கொஞ்சம் கூட சந்தேகம் இல்ல. இந்த மோதல்ல யார் வெற்றி பெறுவாங்கன்றதை காலம்தான் தீர்மானிக்கும்… ஆக மொத்தத்துல நல்ல ஒரு அரசியல் Show இருக்கு. Wait பண்ணி பார்க்கலாம்…