ஏணியில் சறுக்கி விளையாடும் குழந்தை

223
Advertisement

ஏணியில் சறுக்கி விளையாடும் குழந்தையின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

குழந்தைகள் பயமறியாமல் செய்யும் செயல்கள் பல நேரங்களில் ரசிக்க வைப்பதாகவும், சில நேரங்களில் ஆபத்தை எதிர்கொள்வதாகவும் அமையும். அந்த வகையில் அமைந்துள்ள ஒரு குழந்தையின் செயல் தற்போது ரசிக்கவும் பதறவும் வைத்துள்ளது.

இதுதொடர்பாக ட்டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ள ஒரு வீடியோவில், குழந்தையொன்று 16 படிகள் கொண்ட ஏணியில் ஏறிச்செல்கிறது. பின்னர், சறுக்கி விளையாடுவதுபோல மேலிருந்து வேகமாகக் கீழிறங்கி வருகிறது.

Advertisement

குழந்தையின் இந்த சாகஸம் மற்றவர்களை ரசிக்க வைத்தாலும், தவறி விழுந்தால் என்னாகும் என்கிற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வலைத்தளங்களில் பரவ விடவேண்டும் என்பதற்காக இதுபோன்ற ரிஸ்க்கான செயலில் தங்கள் குழந்தைகளை ஈடுபடுத்தும் பெற்றோரைக் கண்டித்து பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.