Monday, February 10, 2025

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பேசியதாக சீமான் மீது வழக்கு பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்து வருகிறார்.

தேர்தல் பிரசாரத்தின் போது வெடிகுண்டுகளை வீசுவேன் என சீமான் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் சீமான் மீது 3கலவரத்தை தூண்டுவது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பேசியது உள்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Latest news