அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பஸ் நிலையம் அருகில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்கள் மத்தியில் பேசி கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தின் நடுவே சென்ற தி.மு.க. நிர்வாகியின் கார் கண்ணாடி அடித்து உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உடல்நிலை சரியில்லாத சிறுவனை, திமுக சேர்மனின் சகோதரர் காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், கூட்டத்தை கலைக்கும் வகையில் திமுகவினர் இவ்வாறு செய்வதாக நினைத்த அதிமுகவினர், அந்த காரை அடித்து உடைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.