திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பாம்பு கடித்து உயிரிழந்தார். பில்லூர் அடுத்த மேலநத்தம் பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ் – வினோதனி தம்பதியின் 8 வயது மகன் கவின், வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது சிறுவனை பாம்பு கடித்துள்ளது. அலறியடித்து கொண்டு தாயிடம் கூறியதை அடுத்து நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சிறுவன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.