Saturday, December 6, 2025

ஒலியின் வேகத்தை ஓவர் டேக் செய்யும் வேகப் பறவை! X-59 சூப்பர் சோனிக் விமானம்!

நாசா மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் இணைந்து உருவாக்கி வரும் “X-59 Supersonic Jet” உலக விமானப் போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒலி வேகத்தை விட வேகமாக பறக்கும் “சூப்பர் சோனிக்” விமானமாகும். ஆனால் இதன் முக்கிய சிறப்பு, மிகக் குறைந்த ஒலி அதிர்வுடன் அதாவது sonic boom-உடன் பறக்கும் திறன் தான். இதனால், குடியிருப்பு பகுதிகளின் மீது கூட இது பறக்க முடியும்.

X-59 விமானத்தின் வடிவமைப்பு மிகவும் நீளமான மூக்குப் பகுதியையும், மெல்லிய உடல் வடிவத்தையும் கொண்டது. இதன் நீளம் சுமார் 94 அடி. மற்றும் அதிகபட்ச வேகம் Mach 1.4, அதாவது மணிக்கு 1,488 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும். நாசா இதனை “Quiet Supersonic Technology” எனப்படும் திட்டத்தின் கீழ் உருவாக்கி வருகிறது. இதன் நோக்கம், எதிர்காலத்தில் வேகமான பயணங்களை சத்தமின்றி மேற்கொள்ள வழி வகை செய்வது.

பொதுவாக, சப்ஸோனிக் விமானங்களான மனிதர்கள் பயணம் செய்யும் சாதாரண விமானங்கள் மணிக்கு 900 கிமீ வேகத்தில் பறக்கின்றன. ஆனால் X-59 அதைவிட 1.5 மடங்கு வேகத்தில் பறக்கும். முக்கியமாக, இது பறக்கும் போது வழக்கமான சூப்பர் சோனிக் விமானங்கள் உண்டாக்கும் பெரிய “boom” ஒலி இல்லாமல், ஒரு சிறிய சத்தம் மட்டுமே உண்டாக்கும்.

இந்த விமானத்தின் முதல் Fly தற்போது வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. இது வருங்கால வேகப் பயணங்களுக்கான புதிய யுகத்தைத் தொடங்கும். கடல் கடந்த விமானப் பயண நேரத்தை பாதியாகக் குறைக்கும் திறனும் இதற்கு உண்டு. இதன் மூலம் சூப்பர் சோனிக் பயணத்தை மீண்டும் மனித வாழ்க்கைக்குக் கொண்டு வர நாசா முக்கியமான முன்னேற்றம் கண்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News