Saturday, December 20, 2025

6 அடி உயர பேருந்தில் 7 அடி உயர மனிதருக்கு வந்த சோதனை

தெலங்கானா மாநிலம் சந்திரயாங் பேட்டையைச் சேர்ந்த அமீன் அகமது அன்சாரி என்ற இளைஞர், தனது தந்தை 2021ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கருணை அடிப்படையில் போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியில் சேர்ந்தார்.

இவர் 7 அடி உயரம் என்பதால் பேருந்தில் தலையை குனிந்த படி பணியாற்றி வருகிறார். இதனால், கழுத்து வலி, முதுகு வலி மற்றும் தூக்கமின்மை உள்ளிட்ட உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்பட்டு, அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது நிலைமையை பார்த்த பலரும் அவரது உடல்நிலை மேலும் மோசமாகாமல் இருக்க, அவருக்கு ஏற்ற வேறு பணியொன்றை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related News

Latest News