22 வயது சைகோவாக மாறிய 6 வயது சிறுமி!!தத்தெடுத்த பெற்றோருக்கு பேரதிர்ச்சி….

56
Advertisement

உக்ரைன் நாட்டை சேர்ந்த பெண் ஒருத்தியை 6 வயது சிறுமி என தத்தெடுத்த அமெரிக்காவை சேர்ந்த தம்பதிகளுக்கும் அதிர்ச்சி சம்பவங்கள் நடந்தேறின அதை பற்றி இத்தொகுப்பில் பார்க்கலாம்.

Natalia Grace என்னும் உக்ரைன் நாட்டை சேர்ந்த 6 வயது சிறுமியை அமெரிக்காவை சேர்ந்த மைக்கேல் மற்றும் கிறிஸ்டின் தம்பதியர் தத்தெடுத்துள்ளனர்.நட்டாலியா பார்ப்பதற்கு சற்றே வித்தியாசமாக காணப்பட்டாலும், அபூர்வ எலும்பு பிரச்சினை கொண்டதால் அவள் அவ்வாறு காட்சியளிப்பதாக மைக்கேல் மற்றும் கிறிஸ்டின் தம்பதியர் எண்ணியுள்ளனர் என சொல்லப்படுகிறது.

ஒருநாள் இரவு மைகேல் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது தற்செயலாக கண் விழிக்க, நட்டாலியா தன் காலருகே கத்தியுடன் நிற்பதைக் கண்டு பயந்துள்ளார்.

சில நாட்கள் படிக்கட்டுகளில் கால்களில் குத்தும் வகையில் போர்ட் பின் என்னும் ஊசிகள் நிறுத்தப்பட்டிருப்பதை தம்பதியர் கவனித்துள்ளார்கள் என கூறப்படுகிறது.

இதில் திகிலூட்டக்கூடிய விஷயம் என்னவென்றால் நட்டாலியா ஆறு வயதுச் சிறுமி அல்ல, 22 வயது பெண். அவருக்கு மாதவிடாய் ஆவதையும் கண்டுபிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ ரீதியாகவும் இது உறுதிசெய்யப்பட்டது குழந்தை ஒன்றைத் தத்தெடுக்க ஆசைப்பட்டு, தினமும் திகிலுடன் வாழும் நிலை தங்களுக்கு ஏற்பட்டுவிட்டதாக தம்பதிகள் வேதனை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மைக்கேல் மற்றும் கிறிஸ்டின் வாழ்வில் நட்டாலியாவால் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி, இம்மாதம் 31ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் ட்ரைலர் வெளியானதென்பது குறிப்பிடத்தக்கது.