30 வயது இளைஞரைக் கடத்தித் திருமணம் செய்த 50 வயதுப் பெண்

241
Advertisement

30 வயது இளைஞரை 50 வயது பெண் கடத்தி, மயக்க மருந்து கொடுத்து
தாலி கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘ஆர்யா’ படத்தில் நடிகர் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிபோல இருக்கிறதா…
உண்மையிலேயே இப்படியொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த அதிர்ச்சி சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
ரிங்கேஷ் கேசர்வாணி என்ற வேளாண்துறைப் பணியாளர் அங்குள்ள
உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ள புகார்மூலம் இந்தப் புரட்சிகர சம்பவம்
அம்பலத்துக்கு வந்துள்ளது.

அவர் அளித்துள்ள அந்த மனுவில்,
”எங்கள் அலுவலகத்தில் ஒப்பந்தப் பணியாளராக 50 வயதுப்
பெண் பணிபுரிந்து வருகிறார். அவர் நீண்டநாட்களாக என்னைத்
திருமணம் செய்துகொள்ளும்படி நிர்பந்தித்து வந்தார். ஆனால்,
இதற்கு நான் சம்மதிக்கவில்லை.

இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு, ஜுலை மாதம் 15 ஆம் தேதி
அவரது நண்பர்களுடன் வந்து என்னைத் தாக்க முயன்றார்.
அதுமட்டுமின்றி, சில போலீசாருடன் சேர்ந்து என்னைப்
பாலியல் வழக்கில் சிக்க வைக்க முயன்றார். உடனே,
ஜபல்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தேன்.
அது பலனளிக்கவில்லை.

மறுநாளே அப்பெண் தனது நண்பர்களுடன் வந்து என்னைக்
கடத்திச்சென்று அவரது உறவினர்கள் வீட்டில் அடைத்து வைத்தார்.
அடுத்த நாளே (ஜுன் 17 ஆம் தேதி) என்னைக் கத்திமுனையில்
கோவில் ஒன்றுக்கு அழைத்துச்சென்று, மயக்க மருந்து கொடுத்து,
மயக்க நிலையிலேயே என்னைத் தாலிகட்ட வைத்தார்.

அதன்பின், அந்த இடத்திலிருந்து தப்பியோடிவந்து ஜபல்பூர் ஐஜி,
எஸ்பி ஆகியோரிடமும், பிற காவல் அதிகாரிகளிடமும் தகவல் தெரிவித்தேன்.
ஆனாலும், எனக்கு எந்தப் பதிலும் வரவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்குச் சான்றாக கோஹல்பூர் போலீஸ் நிலைய சிசிடிவி காட்சிகளையும்
அவர் கேட்டுள்ளார். அவரது புகார்மீது போலீஸ் நடவடிக்கை எடுக்காததால்,
நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அப்படியென்ன இந்த 50 வயது ஆன்டிக்கு ஈர்ப்பு வந்தது 30 வயது இளைஞனைப் பார்த்து?

இந்த இளைஞனின் சுறுசுறுப்பா? இல்ல… இந்த இளைஞனின் கள்ளங்கபடமில்லா சிரிப்பா,
இல்ல… பாக்கெட்ல இருக்கற பணமா?

இப்படி ஆன்டிகள்லாம் அழகான இளைஞர்களைக் கிட்நேப்
பண்ண ஆரம்பிச்சா என்னாகும்..?

கொஞ்சம் அழகா இருந்தாலே ஆண்களுக்கு ஆபத்துதானோ..
உஷாரய்யா உஷார்..