11 ஆண்டாக ஒயிட் பிரட் மட்டுமே சாப்பிடும் 13 வயது சிறுவன்

142
Advertisement

ஆஷ்டன் என்னும் 13 வயது சிறுவன் 11 ஆண்டுகளாக ஒயிட் பிரட்
மற்றும் தயிரை மட்டுமே சாப்பிட்டு வருகிறான். இந்த செய்தி
சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

ஆஷ்டனுக்கு அவனது பெற்றோர் வேறு புதிய உணவுகளைத் தர
முயன்றபோதெல்லாம் கடுமையாக எதிர்த்துள்ளான். இதனால்
அவனுக்குத் தேவையான ஊட்டச் சத்துகள் எதுவும் கிடைக்காமல் போனது.

இதுபற்றி பெற்றோர் மிகுந்த கவலைப்பட்டனர். ஊட்டச் சத்து நிபுணரிடம்
சிறுவனைக் காண்பித்தனர்.

Advertisement

சிறுவனைப் பரிசோதித்த உளவியல் நிபுணர், இது ARFID
(AVOIDANT RESTRICTIVE FOOD INTAKE DISORDER) எனப்படும்
ஒருவகை உளவியல் கோளாறு என்பதையும், சிறுவனின் இந்தப்
பழக்கத்துக்கு காரணம் உணவு மீதான பயம்தானே தவிர,
மருத்துவரீதியான கோளாறு அல்ல என்பதையும் கண்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து பெருமுயற்சி செய்து வேறு உணவுகளை
சிறுவனுக்கு ஊட்டத் தொடங்கினர். அதற்குப் பலன் கிடைக்கத்
தொடங்கியது. உணவு மற்றும் பானங்களை முற்றிலும் தவிர்த்து
வந்த இந்தச் சிறுவன் தற்போது வறுத்த உணவு மற்றும் மிருதுவான
சேண்ட்விச்சுகளை சாப்பிடத் தொடங்கியுள்ளான்.

இதனால், மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர் ஆஷ்டனின் பெற்றோர்.
எனினும், இந்தச் சிறுவன் எந்த நாட்டைச் சேர்ந்தவன் என்னும் விவரம்
வெளியாகவில்லை.