ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை … பேரதிர்ச்சி!!

தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, நவம்பர் மாதத் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை கணிசமாகக் குறைந்து வந்தது. கடந்த 16 நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.15,360 வரை சரிந்தது. இதனால் நகை வாங்கத் திட்டமிட்டிருந்த மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆனால், திடீரென இரண்டு நாட்களுக்கு முன்பு தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. இதனால் நகை பிரியர்கள் குழப்பமடைந்தனர். இதற்கிடையில், நேற்று (நவம்பர் 25) தங்கம் விலை மீண்டும் சரிவைக் கண்டது. அதன்படி, 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.295 குறைந்து ரூ.11,420க்கும், சவரனுக்கு ரூ.2,360 குறைந்து ரூ.91,360க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று (நவம்பர் 26) தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.11,540க்கும், சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.92,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.9,440க்கும், சவரனுக்கு ரூ.760 அதிகரித்து ரூ.75,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மறுபுறம், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.165க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,65,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து மாறிவரும் தங்கம் விலை நகை வாங்குவோர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News