தமிழகத்தில் மீண்டும் கனமழை எச்சரிக்கை… 5 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வார்னிங்..

தமிழகத்தில் வரும் நவம்பர் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 16, 17 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.

நவம்பர் 18, 19 சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 20 மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் வட கடலோர தமிழகத்தின் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவம்பர் 21, 22 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை வானிலை இன்று (நவம்பர் 16) நகரின் சில பகுதிகளில் லேசான மழையும், நாளை (நவம்பர் 17) லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். வெப்பநிலை அதிகபட்சம் 30-31 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சம் 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

எனவே, நவம்பர் 18, 19ஆம் தேதிகளில் கனமழையை எதிர்கொள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related News

Latest News