தமிழகத்தில் நீதித்துறையில் புதிய மாற்றம்… முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு!!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நீதி கிடைக்கவும் தமிழகத்தில் 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், போதைப்பொருள் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்காக 4 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளன. இதன்படி சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர் ஆகிய நான்கு இடங்களில் போதைப்பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட உள்ளன.

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 46.59 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள், போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் ஆகியவற்றை விரைவாக விசாரித்து தீர்வு காண்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த நடவடிக்கை நீதித்துறையின் செயல்பாட்டை விரைவுபடுத்துவதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதி கிடைக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News