சென்னைக்கு அருகே உருவாகிறது தீவிர புயல்… தமிழ்நாட்டில் கனமழை? வானிலை அறிக்கை!!

தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 1) பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், நள்ளிரவில் புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது. நவம்பர் 2ஆம் தேதி தீவிரப் புயலாக மாறி, நவம்பர் 3ஆம் தேதி நெல்லூர் – நர்சாபூர் இடையே ஆந்திரக் கடற்கரையைக் கடக்கக்கூடும். அப்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்திலும், அதிகபட்சமாக 120 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும்.

வட கடலோர தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, திருச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் ஆகிய இடங்களில் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுச்சேரி, காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.

நவம்பர் 2ஆம் தேதி நீலகிரி, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழையும், நவம்பர் 3ஆம் தேதி கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலை 33–34 டிகிரி செல்சியஸாக இருக்கும்.

நவம்பர் 1 முதல் 3ஆம் தேதி வரை வட தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40–60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். வங்கக்கடலின் சில பகுதிகளில் காற்றின் வேகம் 90 முதல் 100 கி.மீ. வரை அதிகரிக்கலாம். எனவே, மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Related News

Latest News