தாராபுரத்தில் வெற்றி யாருக்கு? 5-வது சுற்றில் மாறிய முன்னிலை!

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில், 5வது சுற்று வாக்கு எண்ணிக்கையின்போது திடீரென நிலவரம் மாறியது.

அதாவது 2 வது சுற்று முதல் தவெக வேட்பாளர் சத்யபாமாவை பின்னுக்குத் தள்ளி அதிமுக வேட்பாளர் பானுமதி முன்னிலைக்கு வந்திருந்தார். 4 வது சுற்று வரை இந்த நிலவரம் இருந்த நிலையில், 5வது சுற்று நிலவரம் வெளியானது.

அதில் மீண்டும் தவெக வேட்பாளர் சத்யபாமா முன்னிலைக்கு வந்துள்ளார். 5வது சுற்றில், தவெக வேட்பாளர் சத்யபாமா – 13213 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பானுமதி 12,489 வாக்குகளும், திமுக வேட்பாளர் 11554 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு வெளியான போது சத்யபாமா முன்னிலையில் இருந்த நிலையில், 5வது சுற்றிலிருந்து மீண்டும் தவெக முன்னிலைக்கு வந்துள்ளது. 10.46 மணி நிலவரப்படி தாராபுரத்தில் தவெக முன்னிலையில் உள்ளது. இதை தொடர்ந்து அதிமுக இரண்டாம் இடத்தில் உள்ளது.

Related News

Latest News