சென்னையில் நாளை (09.10.2026) மின்தடை… எந்தெந்த இடங்களில் தெரியுமா?

சென்னையில் நாளை (09.10.2026) மின்தடை… எந்தெந்த இடங்களில் தெரியுமா?

பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படும். அந்த வகையில் சென்னையில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படுகிறது. பின்னர், பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். நாளை (09.10.2026) மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அறிவிப்பின் படி;

பல்லாவரம்

பம்மல், வெங்கடேஸ்வரா நகர், மூவர் நகர், அகத்தீஸ்வரர் கோவில் தெரு, ஆண்டாள் நகர், கவுல் பஜார், இந்திரா நகர், சிவசங்கர் நகர், ஈசிடிவி நகர், மல்லியம்மா நகர், பிரேம் நகர், கல்லியம்மன் நகர், கெருகம்பாக்கம், பம்மல் மெயின் ரோடு, கிரிகோரி தெரு, மசூரன் தெரு, தேமுத்தமன் தெரு, முத்து மோத்தமன் தெரு காந்தி நகர், அனகாபுத்தூர் காமாட்சி நகர், பசும்பொன் நகர், கலைஞர் சாலை, தென்றல் நகர், ஆதம் நகர், வெங்கடேஸ்வரா நகர், முனீஸ்வரன் கோவில், பெரியார் நகர், எம்ஜிஆர் சாலை பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

பெருங்களத்தூர்

குறிஞ்சி நகர், ராகவேந்திரா நகர், காகபுஞ்சந்தர் நகர் பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

ஐயப்பன்தாங்கல்

வசந்தபுரம், ஐயப்பா நகர், மாருதி என்கிளேவ், ஸ்டெப் ஸ்டோன், பொகெய்ன் வில்லாஸ், சங்கமித்ரா அவென்யூ பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

கொரட்டூர்

TNHB கிழக்கு, மத்திய மற்றும் வடக்கு அவென்யூ, தில்லை நகர் விரிவாக்கம், கஸ்தூரி நகர், சிவசக்தி நகர், 3-8 கண்ணகி தெரு, எம்டிஎச் சாலை, முகப்பேர் சாலை, கிரீன் வியூ காலனி, காமராஜ் நகர், கேஆர் நகர், மண்ணூர்பேட்டை பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

திருவேற்காடு

வேலப்பஞ்சாவடி, மாதர்வேடு, பெருமாள் கோவில் தெரு, பத்மாவதி நகர், பி.எச்.ரோடு, கூட்டுறவு நகர். திருமுடிவாக்கம் எம்.கே.பி.நகர், மகளிர் தொழில் பூங்கா, திருநீர்மலை மெயின் ரோடு, பெருமாள் நகர், ஸ்ரீ கிருஷ்ணா நகர், வழுதாளம்பேடு, மைக்ரோ எஸ்டேட், பாம் ரிவேரா அபார்ட்மென்ட், அமர்பிரகாஷ் அபார்ட்மென்ட், குன்றத்தூர், குமரன் நகர், மகாலட்சுமி கூட்டுறவு சங்கம், பி.கே.வி. மகா நகர், கலைமகள் நகர், கலைமகள் பூங்கா ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

ராயப்பேட்டை

பீட்டர்ஸ் சாலை, WK சாலை, கௌடியமுட் சாலை, ராயப்பேட்டை உயர் சாலை, பஜார் சாலை, பீட்டர்ஸ் சாலை, பீட்டர்ஸ் லேன், புத்திபேகம் தெரு, ROB தெரு, ஒயிட்ஸ் சாலை, ஸ்மித் ரோடு, புதிய கல்லூரி, கோபாலபுரம் பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

நெற்குன்றம்

ரெட்டி தெரு, தயாசதன் சாலை, ஏரிக்கரை தெரு, பல்லவன் நகர், மந்தவெளி தெரு, சிவந்தி அவென்யூ, சக்தி நகர் 1-21வது தெரு, NT படேல் சாலை, செல்லியம்மன் நகர், சிடிஎன் நகர், சக்தி நகர் சி பிளாக், காவியா கார்டன், கிருஷ்ணா நகர், அகத்தியர் நகர், அம்பிகா நகர்,விஜிபி, அமுதா நகர், பிஎச் சாலை, ராஜீவ் காந்தி நகர் தெரு பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

Related News

Latest News