சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இனி கிராமப்புறங்களில் வசிப்பவர்களும் LPG சிலிண்டரை புக் செய்ய 45 நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் புதிய உத்தரவின்படி, வீட்டு உபயோக LPG சிலிண்டர் ரீஃபில் புக்கிங் இடைவெளி நாடு முழுவதும் 45 நாட்களில் இருந்து 25 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
இதுவரை நகர்ப்புறங்களில் 25 நாட்களுக்கு ஒருமுறையும், கிராமப்புறங்களில் 45 நாட்களுக்கு ஒருமுறையும் சிலிண்டர் புக் செய்யும் நடைமுறை இருந்தது. இதனால் கிராமப்புற நுகர்வோர் சிலிண்டர் காலியான பிறகும் புதிய சிலிண்டரை உடனடியாக புக் செய்ய முடியாமல் சிரமப்பட்டனர்.
தற்போது LPG விநியோக நிலைமை மேம்பட்டுள்ளதால், இந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, நகரம் மற்றும் கிராமம் என்ற வேறுபாடின்றி அனைத்து வீட்டு உபயோக LPG நுகர்வோரும் 25 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு சிலிண்டரை புக் செய்யலாம்.
இந்த புதிய விதிமுறை Indane, Bharatgas, HP Gas உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் பொருந்தும். LPG தொடர்பான அவசர உதவிக்கு 1906 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.
