இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு அதிகளவில் பயணம் செய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக கூட்ட நெரிசலை தவிர்க்க பலர் நவம்பர் 5ஆம் தேதி வியாழக்கிழமை இரவே புறப்பட திட்டமிடலாம்.
ரயில்களில் 60 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை உள்ளதால், நவம்பர் 5ஆம் தேதி பயணம் செய்ய விரும்புவோர் செப்டம்பர் 6ஆம் தேதி முன்பதிவு செய்யலாம். நவம்பர் 6ஆம் தேதி பயணம் செய்வோர் செப்டம்பர் 7ஆம் தேதி டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும்.
தீபாவளிக்குப் பிறகு சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்புவோர் நவம்பர் 8ஆம் தேதி பயணிக்க செப்டம்பர் 9ஆம் தேதியும், நவம்பர் 9ஆம் தேதி பயணிக்க செப்டம்பர் 10ஆம் தேதியும் முன்பதிவு செய்ய வேண்டும்.
டிக்கெட்டுகள் விரைவாக நிரம்ப வாய்ப்புள்ளதால், பயணிகள் முன்கூட்டியே IRCTC கணக்கில் பயணிகள் விவரங்களை சேமித்து வைத்து, காலை 8 மணிக்கு முன்பே உள்நுழைந்து தயாராக இருப்பது நல்லது.
