தமிழக முதல்வர் விஜய், தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி பிரிட்டன் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வெளிநாட்டுப் பயணத்திற்குத் தேவையான டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட்டைப் பெறுவதற்காக விஜய் சென்னை அண்ணா சாலையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே பாஸ்போர்ட் வைத்திருந்தாலும், அரசுப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு பாஸ்போர்ட்டுக்கு அவர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
இந்த நிலையில், விஜய்யின் பிரிட்டன் பயணம் அவரது குடும்ப வாழ்க்கை குறித்த எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான குடும்ப உறவு தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகின.
சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்ததாகவும், பின்னர் அந்த மனுவை வாபஸ் பெற விரும்புவதாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இதன் பின்னணியில், லண்டனில் வசித்து வரும் சங்கீதாவை விஜய் சந்திப்பாரா என்ற கேள்வி அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் எழுந்துள்ளது. இருவரும் சமரசம் செய்துகொண்டிருக்கலாம் என்ற கருத்துகளும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
எனினும், இதுகுறித்து விஜய் அல்லது சங்கீதா தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. லண்டன் பயணத்தின்போது விஜய் தனது மனைவி சங்கீதா மற்றும் மகள் திவ்யாவை சந்திப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
