பெண் அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

மகப்பேறு என்பது பெண்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான காலகட்டமாகும். கர்ப்பம் மற்றும் பிரசவத்தின்போது பெண்களின் உடல் மற்றும் மனநலத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவதால், தாயும் குழந்தையும் நலமாக இருக்க மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது.

தமிழக அரசு பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு முதலில் 3 மாதங்களாக இருந்தது. பின்னர் 6 மாதங்களாகவும், 2017ஆம் ஆண்டு முதல் 9 மாதங்களாகவும் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து 2021ஆம் ஆண்டு முதல், இரண்டு குழந்தைகளுக்கு குறைவாக உள்ள திருமணமான பெண் அரசு ஊழியர்களுக்கு முழு ஊதியத்துடன் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

அதேவேளை, இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ள பெண்களுக்கு மூன்றாவது குழந்தைக்கான மகப்பேறு விடுப்பு 12 வாரங்களாக மட்டுமே இருந்து வந்தது. இதனை 365 நாட்களாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழக சட்டமன்றத்தில் மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கையின்போது, மூன்றாவது குழந்தைக்கான மகப்பேறு விடுப்பையும் 12 வாரங்களில் இருந்து 365 நாட்களாக உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, நிரந்தர மற்றும் தற்காலிக பணியில் உள்ள திருமணமான பெண் அரசு ஊழியர்கள் இந்தச் சலுகையைப் பெறலாம். 365 நாட்கள் விடுப்புக் காலத்திலும் முழு ஊதியம் வழங்கப்படும். மேலும், இந்த விடுப்பை பிரசவத்திற்கு முன்பாகவோ அல்லது பிரசவத்திற்குப் பிறகோ பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் தாய்மார்கள் உடல்நலத்தை மீட்டெடுத்து, குழந்தையை சிறப்பாக பராமரிக்க கூடுதல் அவகாசம் கிடைக்கும்.

Related News

Latest News