பயணிகளுக்கு குட் நியூஸ்… வரப்போகும் ஏ.சி. பஸ் நிறுத்தங்கள்… எந்தெந்த இடங்களில் தெரியுமா?

சென்னை மாநகராட்சி பகுதிகளில் பயணிகளின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய ஏ.சி. பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பெருநிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் சென்னையில் 11 இடங்களில் புதிய ஏ.சி. பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளன.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் சமீரன் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் முன்னிலையில் பங்களிப்பாளர்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

டி.எம்.எஸ். அண்ணாசாலை, மயிலாப்பூர், வடபழனி, வேளச்சேரி விஜயநகர், சின்னமலை, ஆற்காடு சாலை, ஆலந்தூர் மெட்ரோ, எழும்பூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இந்த ஏ.சி. பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளன. வடபழனியில் மட்டும் இரண்டு இடங்களில் அமைக்கப்படுகின்றன.

புதிய பஸ் நிறுத்தங்களில் கண்காணிப்பு கேமராக்கள், இலவச வைபை, சார்ஜிங் வசதி, மின்விளக்குகள், சாய்வுதளப் பாதைகள், பஸ் வழித்தடத் தகவல்கள் மற்றும் பாதுகாப்பான கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெறும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Related News

Latest News