01.09.2026; மாலையில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை: சவரன் எவ்வளவு?

சென்னையில் தங்கம், வெள்ளி விலை அதிரடி சரிவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்த நிலையில், மாலையில் அதிரடியாக ரூ.1,680 குறைந்துள்ளது. இதனால் நகை வாங்க காத்திருப்போருக்கு சற்று மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இன்று காலை தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.14,385-க்கும், ஒரு சவரன் ரூ.120 அதிகரித்து ரூ.1,15,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், மாலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.210 குறைந்து ரூ.14,175 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,680 சரிந்து ரூ.1,13,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் வெள்ளியின் விலையும் தொடர்ந்து சரிந்துள்ளது. காலை ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.255-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.5,000 குறைந்து ரூ.2.55 லட்சமாக இருந்தது.

மாலையில் வெள்ளி விலை மேலும் ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2.50 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது

Related News

Latest News