ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.45,000 பென்ஷன்? 8வது ஊதியக் குழுவில் புதிய கோரிக்கை!!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடையே 8வது ஊதியக் குழு தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. புதிய ஊதியக் குழு அமலுக்கு வந்தால் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் பல்வேறு படிகளில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் முக்கிய அம்சமாக ஃபிட்மென்ட் ஃபாக்டர் உள்ளது. ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் ஏற்படும் உயர்வை நிர்ணயிப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை 3.83 ஆக உயர்த்த வேண்டும் என ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், குறைந்தபட்ச பென்ஷனை ரூ.9,000-ல் இருந்து ரூ.45,000 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனுடன் நிலுவையில் உள்ள DA, DR தொகைகள், கேஷ்லெஸ் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பல கோரிக்கைகளும் இடம்பெற்றுள்ளன.

8வது ஊதியக் குழு 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்றும், நிலுவைத் தொகை வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.

எனினும், ரூ.45,000 குறைந்தபட்ச பென்ஷன் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. எனவே, இவை தற்போது கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளாக மட்டுமே உள்ளன.

Related News

Latest News