செப்டம்பர் 1 முதல் அமலாகும் முக்கிய மாற்றங்கள்: பட்ஜெட்டில் தாக்கம் ஏற்படுத்துமா?

2026ஆம் ஆண்டின் 8 மாதங்கள் நிறைவடைந்து, செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. இந்த நிலையில், பொதுமக்களின் அன்றாட செலவுகள் மற்றும் பட்ஜெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சில முக்கிய மாற்றங்கள் செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வருகின்றன.

சிலிண்டர் விலை: ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றப்படும். அதன்படி, சர்வதேச சந்தை நிலவரத்தைப் பொறுத்து செப்டம்பர் 1-ம் தேதி சிலிண்டர் விலை உயரலாம், குறையலாம் அல்லது மாற்றமின்றி இருக்கலாம்.

போர்டிங் பாஸ் விதிகள்: வெளிநாடு செல்லும் சர்வதேச பயணிகளின் போர்டிங் பாஸ்களில் இமிகிரேஷன் கவுன்ட்டர்களில் முத்திரை குத்தும் நடைமுறை நிறுத்தப்படுகிறது. அதற்கு பதிலாக மின்னணு போர்டிங் பாஸ் அல்லது அச்சுப் பிரதியை பயன்படுத்தி நடைமுறைகளை முடிக்கலாம்.

எல்பிஜி e-KYC: வீட்டு உபயோக கேஸ் இணைப்புகளுக்கான e-KYC சரிபார்ப்பை ஆகஸ்ட் 31-க்குள் முடிக்க வேண்டும். தவறினால் சிலிண்டர் முன்பதிவு மற்றும் மானியம் தொடர்பான சிக்கல்கள் ஏற்படலாம்.

வருமான வரி: குறிப்பிட்ட பிரிவு வரி செலுத்துவோருக்கான ITR தாக்கல் காலக்கெடு ஆகஸ்ட் 31-ல் முடிவடைகிறது. அதன் பின்னர் அபராதத்துடன் தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்.

கார் விலை: டாடா மோட்டார்ஸ் தனது பயணிகள் வாகனங்களின் விலையை செப்டம்பர் 1 முதல் ரூ.25,000 வரை உயர்த்துகிறது. இந்த உயர்வு பெட்ரோல், டீசல் மற்றும் மின்சார வாகனங்களுக்கும் பொருந்தும்.

Related News

Latest News