PF வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! EPFO-ன் 7 புதிய அதிரடி மாற்றங்கள்!

பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொரு தனியார் துறை ஊழியருக்கும் ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியைப் பி.எஃப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இனி பி.எஃப் பணத்தை எடுப்பதற்கோ, கணக்கை மாற்றுவதற்கோ நீங்கள் அலுவலகம் அலுவலகமாக ஏறி இறங்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் முதலாளி அல்லது நிறுவனத்தின் தயவையும் எதிர்பார்க்க வேண்டியதில்லை.

எல்லாவற்றையும் உங்கள் ஸ்மார்ட்போன் மூலமே வீட்டிலிருந்தே செய்துகொள்ளும் வகையில், பி.எஃப் இணையதளம் இப்போது அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது.

இதில் ஒவ்வொரு ஊழியரும் தெரிந்துகொள்ள வேண்டிய 7 மிக முக்கியமான சேவைகள் பற்றி இப்போது விரிவாகப் பார்ப்போம்.

முதலாவதாக, உங்கள் யு.ஏ.என் (UAN) எண்ணைச் செயல்படுத்துவது இப்போது மிக எளிதாகிவிட்டது. உமாங் செயலி மூலம் முக அடையாளத்தைப் பயன்படுத்தி நீங்களே உங்கள் யு.ஏ.என் எண்ணை உருவாக்கிவிடலாம்.

அடுத்ததாக, உடல்நலக்குறைவு, திருமணம் அல்லது வீடு வாங்குதல் போன்ற அவசரத் தேவைகளுக்காக பி.எஃப் முன்பணத்தைப் பெற இனி ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.

இதற்கு உங்களிடம் செயல்பாட்டில் உள்ள யு.ஏ.என் எண்ணும், முழுமையான கே.ஒய்.சி (KYC) விவரங்களும் இருந்தால் போதும். மிக முக்கியமான ஒரு வசதி, இ-நாமினேஷன்.

எதிர்பாராத அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உங்கள் குடும்பத்தினர் பணத்தைப் பெறுவதில் எந்தச் சிக்கலும் இருக்கக்கூடாது என்பதற்காக, உங்கள் வாரிசுதாரர்களை நீங்களே ஆன்லைனில் சேர்த்துவிடலாம்.

அதேபோல், உங்கள் ஆதார், பான் கார்டு மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை நீங்களே புதுப்பித்துக் கொள்ள முடியும்.

வேலை மாறும்போது பழைய நிறுவனத்திலிருந்து புதிய நிறுவனத்திற்கு உங்கள் பி.எஃப் கணக்கை மாற்றும் ‘டிரான்ஸ்பர்’ வசதியும் இப்போது ஆன்லைனில் சொடுக்கும் தூரத்தில் உள்ளது.

மேலும், உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது, எவ்வளவு வட்டி சேர்ந்துள்ளது என்பதை ‘இ-பாஸ்புக்’ மூலம் வங்கி ஸ்டேட்மென்ட் போலவே டவுன்லோடு செய்து பார்த்துக் கொள்ளலாம்.

ஒருவேளை உறுப்பினர் இறக்க நேரிட்டால், அவருடைய குடும்பத்தினர் மரண இழப்பீடு மற்றும் காப்பீட்டுத் தொகையைப் பெறவும் இப்போது ஆன்லைனிலேயே விண்ணப்பிக்க முடியும்.

இந்தச் சேவைகளைத் தடையின்றிப் பயன்படுத்த, உங்கள் ஆதாருடன் மொபைல் எண் இணைக்கப்பட்டிருப்பது மிகவும் அவசியம்.

உங்கள் யு.ஏ.என் கணக்கில் உள்ள பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம் ஆகியவை உங்கள் ஆதார் விவரங்களுடன் நூறு சதவீதம் சரியாகப் பொருந்த வேண்டும்.

ஒரு வேலையை விட்டு நின்ற பிறகு, உங்கள் பணிவிலகல் தேதியை இணையதளத்தில் புதுப்பிக்கத் தவறாதீர்கள். இந்த 7 விஷயங்களையும் உங்கள் பி.எஃப் கணக்கில் இன்றே சரிபார்த்துவிடுங்கள்.

உங்களின் உழைப்பின் பலன் சரியான நேரத்தில் உங்களுக்குக் கிடைக்க இதுவே சிறந்த வழியாகும். உங்களின் பி.எஃப் கணக்கில் நாமினி பெயர் சேர்க்கப்பட்டுவிட்டதா என்பதை மறக்காமல் செக் செய்யுங்கள்.

Related News

Latest News