சிலிண்டர் வாடிக்கையாளர்களே உஷார்! இதை உடனே செய்யுங்க!

சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு வைத்திருக்கும் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு, மத்திய அரசு, ஒரு மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிலிண்டர் விற்பனையில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்கவும், அரசின் மானியம், சரியான நபர்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்யவும், ‘இ-கேஒய்சி’ (e-KYC) அப்டேட் செய்வது, கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடு, முடிவடைந்துவிட்ட நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை, நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த இ-கேஒய்சி அப்டேட் செய்வது ஏன் இவ்வளவு முக்கியம்? என்றால், மாதம் ஒன்றுக்கு, 25 லட்சத்திற்கும் அதிகமான வீட்டு உபயோக சிலிண்டர்கள், தவறாகப் பயன்படுத்தப்படுவதாக, மத்திய அரசுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவர் பெயரில், பல இணைப்புகள் இருப்பது, இறந்தவர்களின் பெயரில், தொடர்ந்து சிலிண்டர் பெறுவது, மற்றும், வீட்டு உபயோக சிலிண்டர்களை, கள்ளச்சந்தையில், ஹோட்டல்களுக்கு விற்பது போன்ற முறைகேடுகளைத் தடுப்பதே, இதன் முக்கிய நோக்கம்.

இந்த இ-கேஒய்சி அப்டேட்டை, நீங்கள் இன்னும் முடிக்கவில்லை என்றால், உடனடியாக முடித்துவிடுவது அவசியம். காரணம், இந்த அப்டேட்டை செய்யாதவர்களுக்கு, மானிய விலையில் சிலிண்டர் வாங்குவதில், சிக்கல் ஏற்படலாம். மேலும், சரிபார்ப்பு இல்லாத வாடிக்கையாளர்களின் புதிய சிலிண்டர் புக்கிங், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படவும் வாய்ப்புள்ளது.

இதை எப்படி அப்டேட் செய்வது? இதற்கு, இரண்டு எளிய வழிகள் உள்ளன. முதல் வழி, உங்கள் கேஸ் ஏஜென்சி அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று, உங்கள் ஆதார் அட்டையைக் காட்டி, கைரேகையைப் பதிவு செய்து, மிக எளிதாக, இந்த இ-கேஒய்சி-ஐ முடித்துவிடலாம்.

இரண்டாவது வழி, வீட்டில் இருந்தபடியே, உங்கள் மொபைல் போன் மூலமாகவே, இந்த அப்டேட்டைச் செய்வது. நீங்கள், இண்டேன் சிலிண்டர் பயன்படுத்தினால், ‘இந்தியன் ஆயில் ஒன்’ (IndianOil ONE) என்ற செயலியையும், பாரத் கேஸ் பயன்படுத்தினால், ‘ஹலோ பிபிசிஎல்’ (Hello BPCL) என்ற செயலியையும், ஹெச்பி சிலிண்டர் பயன்படுத்தினால், ‘ஹெச்பி பே’ (HP Pay) என்ற செயலியையும், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில், உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்து, ‘e-KYC Update’ என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து, கேட்கப்படும் விவரங்களைக் கொடுத்தால், சில நிமிடங்களிலேயே, உங்கள் இ-கேஒய்சி அப்டேட் ஆகிவிடும்.

ஆக, மத்திய அரசு வழங்கியுள்ள இந்தக் கடைசி வாய்ப்பைப் பயன்படுத்தி, வரும் 31-ஆம் தேதிக்குள், உங்கள் இ-கேஒய்சி அப்டேட்டை முடித்து, தடையின்றி, மானிய விலையில் சிலிண்டர்களைப் பெறுவதை, உறுதி செய்துகொள்ளுங்கள்.

Related News

Latest News