கொளத்தூர் தேர்தலில் என்ன நடந்தது? ஸ்டாலின் vs வி. எஸ்.பாபு… முழு விவரம்!!

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் விஎஸ் பாபு 82,997 வாக்குகள் பெற்று 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது. ஸ்டாலின் 74,202 வாக்குகள் பெற்றார்.

இதனிடையே, ஸ்டாலின் அளித்த விண்ணப்பத்தின் அடிப்படையில் கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சரிபார்ப்பின்போது சில இயந்திரங்கள் திடீரென செயலிழந்ததாகவும், ஆறு வாக்குச்சாவடிகளில் இவிஎம் மற்றும் விவிபேட் பதிவுகளை ஒப்பிட்டபோது முரண்பாடுகள் மற்றும் முறைகேடுகள் கண்டறியப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட்களையும் முழுமையாக சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என ஸ்டாலின் தரப்பில் கோரப்பட்டுள்ளது.

மேலும், விஎஸ் பாபுவின் வெற்றியை செல்லாது என அறிவித்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News