அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL, சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய சிம் கார்டு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, வெறும் ரூ.1 செலுத்தி புதிய BSNL சிம் கார்டை பெறலாம்.
இந்த சலுகை ஆகஸ்ட் மாதம் தொடங்கி செப்டம்பர் 12 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி வரும் நிலையில், BSNL பல்வேறு சலுகைகளையும் அறிவித்துள்ளது. ரூ.2,399 ரீசார்ஜ் திட்டத்தில் சுமார் 412 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
மேலும், FTTH பிராட்பேண்ட் இணைப்பு பெறும் புதிய வாடிக்கையாளர்களுக்கு முதல் மாத வாடகை இலவசமாக வழங்கப்படுகிறது.
இதுதவிர, லேண்ட்லைன் இணைப்பை விரைவாக பெறுவதற்காக பார்கோடு வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பார்கோடை ஸ்கேன் செய்து விவரங்களை பதிவேற்றினால், சுமார் 3 மணி நேரத்தில் இணைப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், BSNL சிக்னல் இல்லாத பகுதிகளிலும் பயன்படுத்தக்கூடிய சாட்டிலைட் போன் சேவையையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.1.12 லட்சம் என கூறப்படுகிறது. ஆகஸ்ட் 15 முதல் முன்பதிவு தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் சரிபார்ப்புக்குப் பிறகே இந்த போனை வாங்க முடியும். பாதுகாப்புப் படையினர், பேரிடர் மீட்புக் குழுக்கள், கப்பல் துறை பணியாளர்கள் மற்றும் சாகசப் பயணிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
