Ola, Uber, Rapido பயணிகளுக்கு செம குட்நியூஸ்! மத்திய அரசு புதிய ரூல்ஸ்…

இந்தியாவில் ஓலா, ஊபர், ரேபிடோ உள்ளிட்ட செயலிகள் மூலம் ஆட்டோ, கார், பைக் போன்ற வாடகை வாகனங்களை பொதுமக்கள் முன்பதிவு செய்து வருகின்றனர்.

இந்த செயலிகளில் பயணம் முன்பதிவு செய்யும்போதே ஓட்டுநர்களுக்கு டிப்ஸ் வழங்குவதற்கான ஆப்ஷன்கள் இடம்பெற்றிருந்தன. மேலும், டிப்ஸ் வழங்கினால் விரைவாக பயணம் உறுதி செய்யப்படும் என்பது போன்ற தகவல்களும் காட்டப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், இதுபோன்ற நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ‘மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதல்கள், 2025’ கீழ் மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன்படி, டிப்ஸ் வழங்குவது பயணியின் முழுமையான விருப்பமாக மட்டுமே இருக்க வேண்டும். பயணம் முடிந்த பிறகு மட்டுமே டிப்ஸ் வழங்குவதற்கான வசதி செயலியில் இருக்க வேண்டும்.

பயணம் தொடங்குவதற்கு முன்போ அல்லது பயணத்தின்போதோ டிப்ஸ் கேட்கும் எந்தவொரு ஆப்ஷனும் செயலியில் இடம்பெறக்கூடாது.

அதேபோல், கூடுதல் டிப்ஸ் வழங்கினால் ஓட்டுநர் பயணத்தை விரைவாக உறுதி செய்வார் அல்லது கேப் விரைவில் கிடைக்கும் என்பது போன்ற பயணிகளைத் தூண்டும் தகவல்களும் இருக்கக்கூடாது.

இத்தகைய நடைமுறைகள் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-க்கு முரணானவை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பயணிகள் விருப்பத்துடன் வழங்கும் டிப்ஸ் தொகை முழுவதும் எந்தப் பிடித்தமும் இல்லாமல் ஓட்டுநருக்கே வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிகளை அனைத்து செயலிகளும் உடனடியாக ஆய்வு செய்து தேவையான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Related News

Latest News