10ஆம் வகுப்பு மாணவர்களே!! தேர்வு முடிவுக்கு பிறகு முக்கிய அறிவிப்பு…

தமிழ்நாட்டில் மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை (ஆகஸ்ட் 12) முதல் வழங்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

மார்ச், ஏப்ரல் 2026-ல் நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய மாணவர்களுக்கு, மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு முடிவுகள் உட்பட, அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகஸ்ட் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் வழங்கப்படும்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையத்திலும் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். மேலும், தேர்வு தொடர்பான கூடுதல் விவரங்களை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

நேரடி தனித்தேர்வர்கள், தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது சமர்ப்பித்த அசல் மாற்றுச் சான்றிதழ்களையும் தாங்கள் தேர்வு எழுதிய மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.

இதற்கிடையே, பொறியியல் கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 13 முதல் தொடங்க உள்ளது.

Related News

Latest News