ஜியோ நிறுவனம் தனது ஓடிடி பாஸ் திட்டங்களில் புதிய ரூ.550 மற்றும் ரூ.2,000 ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே ரூ.200 திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் 30GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5G வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது ரூ.550 திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி, 90GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5G வசதி கிடைக்கிறது.
அதேபோல், ரூ.2,000 திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் 365GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5G வழங்கப்படுகிறது. ஆக்டிவ் பேஸ் பிளான் வைத்திருக்கும் ஜியோ பயனர்கள் இந்த ஓடிடி பாஸ் திட்டங்களை ரீசார்ஜ் செய்து பயன்படுத்தலாம்.
ஜியோவின் தகவலின்படி, ஒவ்வொரு ஓடிடி பாஸ் மூலமும் மாதத்திற்கு சுமார் ரூ.1,500 மதிப்பிலான பொழுதுபோக்கு நன்மைகள் கிடைக்கும். 15-க்கும் மேற்பட்ட பிரீமியம் ஓடிடி ஆப்கள் மற்றும் ஜியோ டிவி மூலம் 1,000-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களை அணுகலாம்.
மேலும், YouTube Premium, JioHotstar, Amazon Prime Lite உள்ளிட்ட சந்தாக்களும் திட்டங்களுக்கு ஏற்ப வழங்கப்படுகின்றன. Sony LIV, ZEE5, Lionsgate Play, Discovery+, Sun NXT, FanCode, Hoichoi உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் பயன்படுத்த முடியும்.
இந்த புதிய திட்டங்களை MyJio ஆப், அதிகாரப்பூர்வ ஜியோ இணையதளம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஜியோ ரீடெய்ல் கடைகள் மூலம் ரீசார்ஜ் செய்யலாம். ஒரே திட்டத்தில் டேட்டா மற்றும் பல ஓடிடி சேவைகளை பெற விரும்புவோருக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
