ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு…

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், தமிழக அரசின் பொது விநியோகத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை பெற குடும்ப அட்டை முக்கிய ஆவணமாக உள்ளது. இதனால், குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களும் கட்டாயமாக இ-கேஒய்சி (e-KYC) பதிவை நிறைவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு இ-கேஒய்சி முகாம் நடத்தப்படுகிறது. இதுவரை கைரேகையை பதிவு செய்யாதவர்கள் அருகிலுள்ள ரேஷன் கடைக்குச் சென்று பயோமெட்ரிக் பதிவை மேற்கொள்ளலாம். பணி காரணமாக வேறு இடங்களில் தங்கியிருப்பவர்களும் தற்போது வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள ரேஷன் கடையிலேயே பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

இ-கேஒய்சி பதிவு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதற்கு ரேஷன் கார்டு மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் அட்டை அவசியம். அனைவரும் நேரில் வந்து POS கருவியில் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். கைரேகை பதிவு சாத்தியமில்லாத முதியவர்களுக்கு கண் விழித்திரை (ஐரிஸ்) ஸ்கேனர் மூலம் பதிவு செய்யப்படும். மேலும், வீட்டை விட்டு வெளியே வர முடியாத முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிலேயே பயோமெட்ரிக் பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இ-கேஒய்சி பதிவு செய்யாதவர்களுக்கு எதிர்காலத்தில் ரேஷன் பொருட்கள் மற்றும் சில நலத்திட்டங்களின் பயன்கள் பாதிக்கப்படலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Related News

Latest News