LPG பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு…

இந்தியாவில் பெரும்பாலான குடும்பங்கள் வீட்டு சமையலுக்கு எல்பிஜி கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றன. உஜ்வாலா திட்டம் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளால் எல்பிஜி சேவை நாடு முழுவதும் விரிவடைந்துள்ளது. இந்நிலையில், போலி கேஸ் இணைப்புகளை கண்டறிந்து நீக்கவும், உண்மையான பயனாளர்களுக்கே மானிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்யவும், அனைத்து நுகர்வோரும் ஆதார் அடிப்படையிலான இ-கேஒய்சி (e-KYC) சரிபார்ப்பை கட்டாயம் முடிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 15 வரை மட்டுமே இந்த செயல்முறையை நிறைவு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட தேதிக்குள் இ-கேஒய்சியை முடிக்காதவர்களுக்கு கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் தாமதம் அல்லது சேவை நிறுத்தம் போன்ற சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், இறுதி நேரம் வரை காத்திருக்காமல் உடனடியாக இ-கேஒய்சியை நிறைவு செய்வது நல்லது.

வாடிக்கையாளர்கள், தாங்கள் பயன்படுத்தும் எண்ணெய் நிறுவனங்களான IOCL, BPCL அல்லது HPCL நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலம் ஆதார் எண் மற்றும் ஓடிபி உதவியுடன் ஆன்லைனில் இ-கேஒய்சியை முடிக்கலாம். அதேபோல், அருகிலுள்ள கேஸ் ஏஜென்சிக்கு ஆதார் அட்டை மற்றும் கேஸ் இணைப்பு புத்தகத்துடன் சென்று, பயோமெட்ரிக் அல்லது ஆவணச் சரிபார்ப்பு மூலம் இலவசமாக இ-கேஒய்சியை செய்து கொள்ளவும் வசதி உள்ளது. தொடர்ச்சியாக தடையின்றி கேஸ் சிலிண்டர் பெற, இந்த நடைமுறையை உடனே நிறைவு செய்வது அவசியம்.

Related News

Latest News