கிளாம்பாக்கம்-செங்கல்பட்டு மெட்ரோ திட்டம்.. முழு விவரம் ….

சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் தற்போது சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை நீட்டிக்கப்பட உள்ளது.

இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கிளாம்பாக்கம் முதல் செங்கல்பட்டு வரை மெட்ரோ சேவையை மேலும் நீட்டிக்கும் திட்டத்திற்கும் முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.

இந்த நீட்டிப்பு சென்னை புறநகர் மக்களின் நீண்டகால கோரிக்கையாகும். கிளாம்பாக்கம்–செங்கல்பட்டு இடையே நெடுஞ்சாலைத்துறை அமைக்கவுள்ள 6 வழி உயர்மட்ட மேம்பால சாலையுடன் இணைந்து டபுள் டக்கர் வடிவில் மெட்ரோ பாதை அமைக்கப்பட உள்ளது.

திட்ட அறிக்கையில் பயணிகள் எண்ணிக்கை, மண் தன்மை, நிலையங்கள் அமைக்கும் இடங்கள் மற்றும் திட்டச் செலவு போன்றவை ஆய்வு செய்யப்படுகின்றன.

இந்த வழித்தடம் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் மற்றும் வண்டலூர் போன்ற முக்கிய பகுதிகளை இணைக்கும். மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், சென்னை விமான நிலையம் மற்றும் தாம்பரம் ரெயில் நிலையம் ஆகிய முக்கிய போக்குவரத்து மையங்களுக்கு சிறந்த இணைப்பை வழங்கும்.

வெளிவட்டச் சாலையுடன் இணைப்பதற்காக தாம்பரம் அருகே இடைநிலை சாய்வுப் பாதைகளும் முன்மொழியப்பட்டுள்ளன.

மொத்தம் 15.46 கிலோமீட்டர் நீளத்தில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் 13 உயர்மட்ட மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. மேம்பாட்டு சாலைகள் உள்ளிட்ட இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.9,335 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News