25.07.2026; தங்கம் வாங்குவோருக்கு அதிர்ச்சி: விலை மீண்டும் உயர்வு…

இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் போர் பதற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.

கடந்த 17-ஆம் தேதி வரை குறைந்து வந்த தங்கம், 18-ஆம் தேதி முதல் உயரத் தொடங்கி, 22-ஆம் தேதி சவரனுக்கு ரூ.1,680 வரை அதிகரித்தது.

மேலும் உயருமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று தங்கம் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.270 மற்றும் ஒரு சவரனுக்கு ரூ.2,160 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,230க்கும், ஒரு சவரன் ரூ.1,05,840க்கும் விற்பனையானது.

இந்நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ரூ.13,300க்கும், ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,06,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையில், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.240க்கும், பார் வெள்ளி ரூ.2,40,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை மாற்றம் நகை வாங்கத் திட்டமிடுவோரிடையே தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறது.

Related News

Latest News