‘ஈரான் கெஞ்சுகிறது’… கொடூரமாக பாய்ந்த ஏவுகணைகள்! டிரம்ப் வெளியிட்ட வீடியோ !

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் ஒரு நேரடி மோதல் வெடித்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஈரானின் பல்வேறு ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய கொடூரமான வான்வழித் தாக்குதல்களின் வீடியோவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரடியாகப் பகிர்ந்து, ஈரானுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானின் அணுமின் நிலையம் அமைந்துள்ள புஷெர் பகுதி மற்றும் முக்கியமான துறைமுக நகரங்களான சபாகர், பந்தர் அபாஸ் மற்றும் இரான்ஷாஹரில் உள்ள ராணுவ விமான தளம் ஆகியவற்றை குறிவைத்து அமெரிக்கா இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. தாங்கள் நடத்திய தாக்குதல் மிக வலிமையானது என்றும், அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் இருபது மடங்கு அதிகப்படியான பதிலடியை ஈரான் சந்திக்கும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

மறுபுறம், ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் டிரம்ப், ஈரான் தங்களைத் தொடர்பு கொண்டு அமைதி ஒப்பந்தத்திற்காகக் கெஞ்சிக் கொண்டிருக்கிறது என்று ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளார். ஆனால், ஈரானை நம்ப முடியாது என்றும், அவர்கள் இந்த ஒப்பந்தத்தை மதிப்பார்கள் என்பதில் தமக்கு நம்பிக்கை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மோதல் காரணமாக ஈரான் நடத்திய பதில் தாக்குதல்கள் பஹ்ரைன், குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளை நோக்கிப் பாய்ந்துள்ளன. குவைத் ராணுவம் தங்களை நோக்கி வந்த ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை நடுவானிலேயே தடுத்து அழித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்தத் தாக்குதலுக்கும் டிரம்பின் மிரட்டல்களுக்கும் ஈரான் தரப்பிலிருந்து மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. டிரம்பின் இந்த மிரட்டல் பேச்சுக்கள் அவரது பலவீனத்தின் அடையாளம் என்றும், ஈரானியர்களை அச்சுறுத்தி பணிய வைக்க முடியாது என்றும் ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சகம் சாடியுள்ளது.

மேலும், உலக நாடுகளின் மிக முக்கியமான வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை தங்களது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்போவதாக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையேயான இந்த போர்க்கள மோதலால் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் எட்டு சதவீதம் வரை உயர்ந்து உலகப் பொருளாதாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News