சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் சிறப்பாக பணியாற்றிய 300 காவல்துறையினருக்கு முதல்வர் பதக்கம் வழங்கும் விழா நடைபெற்றது. காவல்துறையில் சிறந்த சேவையை பாராட்டும் வகையில் ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருது, காவலர்களுக்கு மிக முக்கியமான அங்கீகாரமாக கருதப்படுகிறது.அந்த வகையில் நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் காவல்துறை சார்பில் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட தயாராக இருந்த சூழலில் , சான்றிதழ்களை ஆய்வு செய்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது வழங்கப்பட இருந்த சான்றிதழ்களில் தற்போதைய முதல்வரின் பெயர் இடம்பெற வேண்டிய இடத்தில் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் பெயரும் அவரது கையெழுத்தும் அச்சிடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இந்த தகவல் நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தபோதே அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலைமையை சமாளிக்க உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், சான்றிதழ்களை நேரடியாக வழங்கும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து நிகழ்ச்சியில் காவலர்களுக்கு பதக்கங்கள் மட்டும் வழங்கப்பட்டன.இதையடுத்து நிகழ்ச்சியில் காவலர்களுக்கு பதக்கங்கள் மட்டும் வழங்கப்பட்டன. பின்னர் சான்றிதழ்கள் அனைத்தும் திரும்ப பெறப்பட்டு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டன. பின்னர் முதல்வர் விஜய் விஜய் கைழுத்திடப்பட்ட சான்றிதழ்கள் வந்த பிறகு சம்பந்தப்பட்ட காவலர்களிடம் தனியாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து காவல்துறை உயரதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டபோது, தேர்தலுக்கு முன்பாகவே இந்த சான்றிதழ்கள் அச்சடிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.மேலும் பழைய கையிருப்பில் இருந்த சான்றிதழ்கள் தவறுதலாக பயன்படுத்தப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், தற்போதைய முதல்வரின் பெயர் மற்றும் கையெழுத்துடன் புதிய சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டிய நிலையில், அலுவலக அளவிலான கவனக்குறைவு காரணமாக இந்த தவறு நிகழ்ந்துள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
