டாப் லிஸ்டில் வந்த தமிழ்நாடு – வியந்து பார்க்கும் தேசம்

இந்தியாவில் வங்கிக் கணக்குகள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மிக அதிவேகமாக வளர்ந்து வரும் இப்போதைய சூழலில், வங்கிக் கடன் பெறுவதில் தமிழ்நாடு மிக பிரம்மாண்டமான சாதனை படைத்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள மிகத் துல்லியமான மாவட்ட வாரியான கடன் மற்றும் வைப்புத் தொகை தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.இந்த ஆய்வறிக்கையில் ஒட்டுமொத்த நாட்டின் வங்கிக் கடனில் சுமார் 27.76 சதவீத பங்கினைத் தமிழ்நாடு மட்டுமே பெற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.

மாநில வாரியாகக் கணக்கிடப்பட்ட இந்தத் தேசியக் கடன் பட்டியலில், தமிழ்நாடு முதலிடத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், எப்போதும் முதலிடத்தில் இருக்கும் மராட்டிய மாநிலம் 27.70 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திற்குத் சென்றது . இதற்க்கு அடுத்தபடியாக கர்நாடகா, குஜராத் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.தமிழ்நாடு இந்த முன்னணி நிலையை அடைந்ததற்குப் பின்னால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவும் அசுரத்தனமான தொழில் மற்றும் வணிக மையங்களின் வளர்ச்சியே மிக முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

சென்னை, கோவை, திருப்பூர், ஓசூர், சேலம் மற்றும் திருச்சி ஆகிய நகரங்கள் தொழில் துறையில் அசுர வேகத்தில் வளர்ந்து வருகின்றன. வாகன உற்பத்தி, அதிநவீன தகவல் தொழில்நுட்பம், உலகத்தரம் வாய்ந்த ஜவுளி ஏற்றுமதி, தோல் பொருட்கள் உற்பத்தி, பிரம்மாண்ட பொறியியல் தொழில்கள், சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மற்றும் துறைமுக வர்த்தகம் எனப் பல்வேறு துறைகளில் தமிழ்நாடு இந்தியாவின் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது.நாட்டின் மிக முக்கியப் பொருளாதார மையமாகத் திகழும் மராட்டிய மாநிலத்தையே பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு இந்த அசுர வளர்ச்சியை எட்டியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது

Related News

Latest News