அண்ணாமலை பாஜகவில் இருந்து விலக முக்கிய காரணங்கள்

அண்ணாமலை பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி உள்ளார். இவரது ராஜினாமாவை ஏற்பதாக பாஜக தேசிய தலைமை அறிவித்துள்ள நிலையில் . அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகுவதற்கான முக்கிய காரணங்கள் குறித்து இதில் பார்ப்போம்

2020ல் பாஜகவில் இணைந்து, 2021 தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலை கட்சியில் சேர்ந்த முதலே திராவிட கட்சிகளை கடுமையாக விமர்சித்தது அவருக்கு ஒரு பெயரை பெற்றுத்தந்தது. 2024 லோக்சபா தேர்தலில் பாஜக தனித்து களம் கண்ட நிலையில், 2026 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க நினைத்தது.ஆனால், அதிமுக கூட்டணியில் சேர அண்ணாமலை விரும்பவில்லை. அதோடு, மாநில தலைவராக அண்ணாமலை இருந்தால் கூட்டணியில் இணையமாட்டோம் என எடப்பாடி பழனிசாமி கூறியதாக தெரிகிறது. இதனால், 2025ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விடுவிக்கப்பட்டார்.

அண்ணாமலைக்கு மத்தியில் பொறுப்பும், 2026 தேர்தலில் சீட்டும் வழங்குவதாக கூறிய பாஜக கடைசி வரை அதை வழங்கவில்லை. 2026 சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். ஆனால், அத்தொகுதியை பாஜக தலைமை வானதி சீனிவாசனுக்கு கொடுத்தது.இதனால், அண்ணாமலை கடும் அதிருப்தியில் இருந்தார். மேலும், அவரை சிங்காநல்லூர், மதுரை தெற்கு, விருகம்பாக்கம் உள்ளிட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளராக பாஜக நியமித்தது.தனக்கு சீட் கொடுக்கப்படாதை அடுத்து, அந்த பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலகினார்.இதன் மூலம், பாஜக தலைமை மீது அவர் அதிருப்தியில் இருந்தது அப்பட்டமாக தெரிந்தது. தொடர்ந்து, அவருக்கு மத்திய அமைச்சரவையில் பொறுப்பு கொடுக்கப்படும் என பாஜக தலைமை அவரை சமாதானப்படுத்தியது ஆனால், இன்று வரை எதுவும் கொடுக்கவில்லை.

மாநிலம் மற்றும் மத்தியில் எந்த ஒரு பொறுப்பும் கொடுக்காமல், அவரை பாஜக மேலிடம் மொத்தமாக ஒதுக்கியது அண்ணாமலையின் ஆதரவாளர்கள் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.மேலும், இளைஞர்களின் ஆதரவு அண்ணாமலைக்கு இருப்பதால், தனிக்கட்சி தொடங்க உள்ளார். விஜய்க்கு எப்படி இளைஞர்கள் ஆதரவு இருக்கிறதோ, அதே போல, தன்னுடைய ஆதரவாளர்கள் திரட்டுவதற்கு தனிக்கட்சி தொடங்குகிறார்.மேலும், தவெக விஜய் vs அண்ணாமலை என்ற நோக்கில் தான், அவர் புதிய கட்சியை அவர் தொடங்க உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

Related News

Latest News