பாஜகவுக்கு Bye Bye – அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு ?

தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை கடந்த ஆண்டு நீக்கப்பட்டார். அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் முனைப்பில் பாஜக இந்த மாற்றத்தை செய்தது. அண்ணாமலையின் பாஜக மாநில தலைவர் பதவி நயினார் நாகேந்திரனுக்கு வழங்கப்பட்டது.இதனால் கடும் அதிருப்தியடைந்த அண்ணாமலை நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. பிரசாரம் மட்டுமே செய்தார். இந்நிலையில் தான் கடந்த 1ம் தேதி டெல்லி சென்ற அண்ணாமலை பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ், பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து தனது ராஜினாமா முடிவை அறிவித்தார்.

இந்நிலையில் அண்ணாமலையை பாஜக மேலிட தலைவர்கள் சமாதானம் செய்தபோது ராஜ்யசபா பதவி வழங்குவதாக கூறினர். இதற்காக ஆந்திராவில் இருந்து ராஜ்யசபா எம்பியாக்குவதாக தெரிவித்தனர். இங்கு மொத்தம் 4 ராஜ்யசபா இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு வரும் 18 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அண்ணாமலைக்காக ஆந்திராவில் ஒரு ராஜ்யசபா இடத்தை சந்திரபாபு நாயுடுவிடம் கேட்டு பாஜக பெற்றது. அண்ணாமலைக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீதமுள்ள 3 இடங்களில் தெலுங்குதேசம் 2 இடங்களிலும், ஒன்றில் பவன் கல்யாணின் ஜனசேனா வேட்பாளரும் போட்டியிட முடிவு செய்யப்பட்டது.ஆனால் அண்ணாமலை சமாதானம் அடையவில்லை

அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதால் அவருக்காக கோரப்பட்ட ராஜ்யசபா எம்பி இடம் விட்டு கொடுக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் ஆந்திராவில் உள்ள 4 ராஜ்யசபா இடங்களில் 3ல் தெலுங்குதேசம் கட்சி வேட்பாளர்களும், ஒன்றில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி வேட்பாளரும் போட்டியிட உள்ளனர். ஆந்திராவில் இருந்து பாஜக போட்டியிடவில்லை என் தகவல் வெளியாகி உள்ளது.

Related News

Latest News