இளம் பெண்ணை முகத்தில் கல்லால் தாக்கிய கொடூர காதலன்… பதைபதைக்க வைக்கும் வீடியோ வைரல்…

இளம் பெண் ஒருவரை இளைஞர் கல்லால் முகத்தில் கொடூரமாக தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. நடந்தது என்ன? விரிவாக பார்க்கலாம் இந்த க்ரைம் தொகுப்பில்.

திருச்சி காஜாமலை பகுதியில் தந்தை பெரியார் கல்லூரி மத்திய மண்டல ஐஜி அலுவலகம் அதன் அருகே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் என காவல்துறை சார்ந்த அதிகாரிகள் உயர்மட்ட அலுவலகங்கள் இருக்கிறது.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் மற்றும் இளம் பெண் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. திருச்சியில் உள்ள பிரபல கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த அந்த இளைஞர் தில்லைநகரில் உள்ள ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.

அவரை காதலித்து வந்த கல்லூரி மாணவி காஜாமலையில் உள்ள தந்தை பெரியார் கல்லூரியில் பயின்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இருவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு மாணவியின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தனது காதலனிடம் கூறியுள்ளார் எதுவாக இருந்தாலும் நேரில் பேசிக் கொள்ளலாம் என அவரை நேரில் அழைத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேரில் பேசுவதற்காக வந்த மாணவியிடம் நீண்ட நேரமாக காதலன் காதல் குறித்து பேசி உள்ளார். இதில் உடன்படாத மாணவியை ஆத்திரமடைந்த மாணவன் கொடூரமாக தாக்கி முகத்தில் கல்லால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாணவி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

இதனை பார்த்த சக பொதுமக்கள் மாணவியை மீட்டு தனியார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மாணவியை தாக்கிய அந்த இளைஞரை விரட்டி பிடித்து காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கே கே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News