ஐபிஎல் 2026 களம் இப்போ வேற லெவலில் சூடுபிடிச்சிருக்குங்க! ராய்பூரில் நேற்று நடந்த ஒரு மிக முக்கியமான போட்டியில, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்துல வீழ்த்தி, ப்ளே-ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செஞ்சிருக்காங்க நம்ம ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.
இந்த மேட்ச்ல ‘கிங்’ கோலி விளையாடின விதம் இருக்கே.. அது உண்மையிலேயே ஒரு மாஸ் ஆட்டம்! வெறும் 60 பந்துகள்ல 105 ரன்கள் எடுத்து, ஐபிஎல் வரலாற்றில் தனது 9-வது சதத்தை விளாசி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் ஆச்சரியப்பட வச்சிருக்காரு. கோலியின் இந்த அதிரடியால, 193 ரன்கள் இலக்கை இன்னும் 5 பந்துகள் மீதமிருக்கும் போதே ஆர்சிபி அசால்ட்டா எட்டிப்பிடிச்சிருக்காங்க.
இந்த ஒரு மேட்ச் மூலமா விராட் கோலி பல இமாலய சாதனைகளைத் தகர்த்திருக்காரு. டி20 கிரிக்கெட் வரலாற்றில் 14,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர் அப்படிங்கிற பெருமை இப்போ கோலிக்கு கிடைச்சிருக்கு. அதுமட்டும் இல்லாம, கிரிஸ் கெய்ல் 423 இன்னிங்ஸ்ல செஞ்ச இந்தச் சாதனையை, கோலி வெறும் 409 இன்னிங்ஸ்லயே செஞ்சு காட்டி, அதிவேகமாக 14 ஆயிரம் ரன்களை அடிச்ச வீரர்னு உலக சாதனை படைச்சிருக்காரு. தற்போது 12 போட்டிகளில் 16 புள்ளிகளுடன் பெங்களூரு அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிச்சு கெத்து காட்டிட்டு வர்றாங்க.
சரி, இப்போ மத்த அணிகளோட ப்ளே-ஆஃப் வாய்ப்பு எப்படி இருக்குனு பார்த்தா, புள்ளிப் பட்டியல்ல பெங்களூரு முதலிடத்துல இருந்தாலும், ப்ளே-ஆஃப் செல்வதற்கான வாய்ப்புல 94.8 சதவீதத்தோட குஜராத் டைட்டன்ஸ் தான் இப்போ டாப்ல இருக்காங்க. நம்ம ஆர்சிபி-க்கு 92.6 சதவீத வாய்ப்பு இருக்கு. ஆனா சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு தான் இப்போ ஒரு சின்ன கவலையான செய்தி.
சிஎஸ்கே-வோட ப்ளே-ஆஃப் வாய்ப்பு இப்போ 41.7 சதவீதமா குறைஞ்சிருக்கு. அதேபோல ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு 60 சதவீதத்துக்கு மேல வாய்ப்பு இருக்குறப்போ, ராஜஸ்தான் ராயல்ஸ் 40 சதவீத வாய்ப்போட போராடிட்டு இருக்காங்க.
பாவம் கொல்கத்தா அணி! ஆர்சிபி-கிட்ட தோத்ததால அவங்களோட ப்ளே-ஆஃப் கனவு இப்போ வெறும் 1.8 சதவீதமா சரிஞ்சிடுச்சு. அதேபோல டெல்லி கேப்பிடல்ஸ் வெறும் ஒரு சதவீதத்தோட தப்பிப் பிழைக்கப் பாக்குறாங்க. ஆனா ரொம்ப வருத்தமான விஷயம் என்னன்னா, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் அதிகாரப்பூர்வமா இந்த ப்ளே-ஆஃப் ரேஸ்ல இருந்து இப்போவே வெளியேறிட்டாங்க.
விராட் கோலியோட இந்த விஸ்வரூப ஃபார்ம் ஆர்சிபி-க்கு திரும்ப கோப்பையை வாங்கிக் கொடுக்குமா? சிஎஸ்கே இந்தச் சிக்கல்ல இருந்து மீண்டு வந்து ப்ளே-ஆஃப் போகுமா? உங்களோட கருத்துக்களை கமெண்ட்ல சொல்லுங்க.
