11.05.2026; நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்… தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு…

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இயக்கத்துடன் காணப்படும் நிலையில் இன்றைய நிலவரப்படி 400 ரூபாய் குறைந்துள்ளது.

அதாவது, நேற்று முன்தினம் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,13,200-க்கும், ஒரு கிராம் ரூ.14,150-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையும் ஒரு கிராம் ரூ.280-ம் ஒரு கிலோ ரூ.2.80.000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதாவது, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,100-க்கும் சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில் கிராமுக்கு 5 ரூபாயும், கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாயும் உயர்ந்து ஒரு கிராம் ரூ.285-க்கும், ஒரு கிலோ ரூ.2.85.000 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related News

Latest News