₹2,000க்கு மேல் UPI செய்தால் கட்டணம் இல்லையா? முழு விவரம் இதோ!!

UPI மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. ₹2,000க்கு மேல் செய்யப்படும் சில தகுதியான UPI வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% Merchant Discount Rate (MDR) கட்டணம் விதிக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.

இந்த புதிய விதி முதலில் அக்டோபர் 15, 2026 முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், வணிகர்கள் மற்றும் பணப்பரிவர்த்தனை நிறுவனங்கள் கூடுதல் அவகாசம் கோரியுள்ளதால், இதை ஜனவரி 2027 வரை தள்ளிப்போடுவது குறித்து ஆலோசனை நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான இறுதி முடிவை NPCI இன்னும் அறிவிக்கவில்லை.

முக்கியமாக, இந்த 0.4% கட்டணம் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக பிடித்தம் செய்யப்படும் UPI கட்டணம் அல்ல. இது வணிகர் தரப்பில் விதிக்கப்படும் கட்டணமாகும். உதாரணமாக, ₹5,000 மதிப்புள்ள பொருளை UPI மூலம் வாங்கினால், 0.4% என்ற அடிப்படையில் ₹20 MDR ஆகும். இதனால் வாடிக்கையாளர் கட்டாயமாக ₹5,020 செலுத்த வேண்டும் என்று அர்த்தமில்லை.

மேலும், நண்பர் அல்லது குடும்ப உறுப்பினருக்கு ₹10,000 போன்ற தொகையை UPI மூலம் அனுப்பினாலும் இந்த MDR பொருந்தாது. இந்த விதி முக்கியமாக ₹2,000க்கு மேல் செய்யப்படும் தகுதியான நபர்-வணிகர் (P2M) பரிவர்த்தனைகளுக்கே தொடர்புடையது.

எனவே, அக்டோபர் 15 அல்லது ஜனவரி 2027 என எந்த தேதியும் தற்போது இறுதி செய்யப்படவில்லை. NPCI-யின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகே அமல்படுத்தும் தேதி உறுதி செய்யப்படும்.

Related News

Latest News