பாகிஸ்தான், ஓமன், ரஷ்யா! அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் போடும் ‘பிரம்மாண்ட வியூகம்’!

அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை ஒரு முடிவுக்கு வந்துவிட்டது என்று உலகமே நினைத்துக் கொண்டிருந்த வேளையில், ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, மீண்டும் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்குத் திரும்பியிருப்பது, சர்வதேச அரசியலில் ஒரு மிகப்பெரிய சஸ்பென்ஸை உருவாக்கியுள்ளது.

இது, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே, திரைக்குப் பின்னால் ஒரு புதிய, மர்மமான ராஜதந்திர ஆட்டம் நடந்து கொண்டிருப்பதையே காட்டுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை, ஈரான் அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பாகிஸ்தான் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். ஆனால், அமெரிக்கப் பிரதிநிதிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தை இல்லை என்று கூறிவிட்டு, சனிக்கிழமை அங்கிருந்து ஓமன் நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றார். இதனால், அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துவிட்டது என்று கருதப்பட்டது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், தனது தூதர்களின் பயணத்தை ரத்து செய்தார்.

ஆனால், இப்போது ஒரு மெகா ட்விஸ்ட்! ஓமனில் தனது சந்திப்புகளை முடித்த அராக்சி, ஞாயிற்றுக்கிழமை மாலை, மீண்டும் இஸ்லாமாபாத்திற்குத் திரும்பியுள்ளார். “இந்தப் போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு செயல்திட்டத்தை நாங்கள் பாகிஸ்தானிடம் பகிர்ந்துள்ளோம். ஆனால், அமெரிக்கா உண்மையிலேயே பேச்சுவார்த்தையில் தீவிரமாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்,” என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, ஒரு புதிய குண்டைப் போட்டுள்ளார்.

ஈரானின் இந்தத் திடீர் மூவ், பல கேள்விகளை எழுப்புகிறது.

  1. அமெரிக்கத் தூதர்கள் வராத போதிலும், ஈரான் அமைச்சர் மீண்டும் பாகிஸ்தான் வந்தது ஏன்?
  2. பாகிஸ்தான் வழியாக அமெரிக்காவுக்கு ஈரான் அனுப்பியுள்ள அந்த “ரகசிய செயல்திட்டம்” என்ன?
  3. பாகிஸ்தான், ஓமன், அடுத்து ரஷ்யா என ஈரான் அமைச்சர் பயணம் மேற்கொள்வதன் பின்னணி என்ன?
  4. அமெரிக்காவிற்கு எதிராக ஒரு புதிய கூட்டணியை ஈரான் உருவாக்குகிறதா?

என்று இப்படி பல கேள்விகள் எழுக்கமின்றன.

அமெரிக்கா, “எங்களிடம் தான் எல்லா கார்டுகளும் உள்ளன” என்று இறுமாப்புடன் இருக்கும் நிலையில், ஈரானோ, தனது ராஜதந்திர நகர்வுகள் மூலம், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர, தாங்களும் தயாராகவே இருக்கிறோம் என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது.

இஸ்லாமாபாத்தில் இப்போது நடப்பது, வெறும் ஒரு சாதாரண இராஜதந்திரச் சந்திப்பு அல்ல. அது, மத்திய கிழக்கின் எதிர்காலத்தையும், உலகப் பொருளாதாரத்தின் தலைவிதியையும் தீர்மானிக்கப் போகும் ஒரு மிக முக்கியமான சதுரங்க ஆட்டம். இந்தப் போட்டியில், ட்ரம்ப்பின் ஆதிக்கம் வெல்லுமா, அல்லது ஈரானின் ராஜதந்திரம் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related News

Latest News